லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

தூசி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2022-02-13 18:05 GMT
தூசி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமம் கல்குட்டை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் நண்பர்கள் சந்துரு (வயது 23), பூபாலன். 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

தூசி அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் பேசும் பெருமாள் கோவில் எதிரில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் சந்துரு, பூபாலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பிரகாஷ் காயமின்றி தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். பூபாலன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்