அரசு பள்ளியில் புதிய நூலகம்

மாப்படுகை ஊராட்சியில் அரசு பள்ளியில் புதிய நூலகத்தை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்.;

Update:2022-02-13 23:24 IST
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் புத்தங்களை  வழங்கி பேசுகையில், மாணவர்கள் எளிமையாக பாடங்களை படிப்பது எப்படி? கலை, விளையாட்டு போன்ற துறைகளில் மாணவர்கள் தங்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி? போன்ற விஷயங்கள் அடங்கிய நூல்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இதனை மாணவர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்றார். 
விழாவில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்