தர்மபுரி அருகே சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது
தர்மபுரி அருகே சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோவில் கைது
தர்மபுரி:
தர்மபுரி அருகே புலிக்கரை பகுதியை சேர்ந்தவர் பெருமள். இவருடைய மகன் பாண்டு (வயது 22). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 29-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டுவை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.