தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது

திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-13 17:35 GMT
மயிலம், 

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மயிலம், திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்ய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் மயிலம் முருகன் கோவில் பின்புறம் உள்ள தைலமர தோப்பில் மர்மநபர்கள்  பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மேல்கமாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (52) மற்றும் அவரது மகன் செல்வக்குமார் (23). என்பதும்,  மயிலம், திண்டிவனம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்