சிவகங்கை,
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளி, கல்லூரி வகுப்புகளுக்கு வரக்கூடாது எனும் கருத்தை கண்டித்து சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்தது. சிவகங்கை மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் திருவாரூர் அப்துர் ரகுமான், மாவட்ட செயலாளர் சாகுல், மாவட்ட பொருளாளர் தீன், மாவட்ட துணைத்தலைவர் அப்துல் சித்திக், மாவட்ட துணை செயலாளர்கள் இஸ்மாயில், சம்சுதீன், ஆசிப், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் ஹாலித் மற்றும் சிவகங்கை கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.