வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
உத்தமபாளையம் பகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அங்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் அறை, கணினி அறை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும் இடங்கள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்தளம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தையும் அவர் ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முத்துக்குமார், கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.