கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி விவசாயி சாவு

கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி விவசாயி சாவு

Update: 2022-02-13 17:10 GMT

கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கீழ் நாரியப்பனூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 61). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு தேவையான குழாய்கள் வாங்கி வர டிராக்டரில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் கிராமத்துக்கு சென்றார். அங்கு கடைக்கு செல்வதற்காக கணேசன் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்