நெல்லிக்குப்பம் அருகே ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

நெல்லிக்குப்பம் அருகே ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனா்.

Update: 2022-02-13 17:07 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் போலீஸ் சோதனை சாவடி அருகே  தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அசோகன் தலைமையில் நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, போலீசார் பாஸ்கரன், ரவிவர்மன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் வந்தவர் 60 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணமின்றி எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அலுவலர் சண்முகசுந்தரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்