வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டுபோனது.
கரூர்
கரூர் நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 51). வெங்காய வியாபாரி. இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது உள்ளே புகுந்த மர்மநபர்கள் 2 பேர், 5 பவுன் தங்க நகையை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கணேசன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.