கும்பகோணம் மல்லான் குளம் சீரமைக்கப்படுமா?

கும்பகோணம் மல்லான் குளம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.;

Update: 2022-02-13 17:03 GMT
கும்பகோணம்:
கும்பகோணம் மல்லான் குளம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
மல்லான் குளம்
கும்பகோணம்- தாராசுரம் காய்கறி மார்க்கெட் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய பகுதி பேட்டை சாலைக்கார தெரு பகுதியாகும்.  இப்பகுதியில் புகழ்பெற்ற சந்தான ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மல்லான் குளம் தஞ்சை மெயின் சாலையில் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள இந்த குளம் கடந்த பல வருடங்களாக தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் இந்த குளம் சுகாதார சீர்ேகட்டின் பிறப்பிடமாக உள்ளது. 
தூர்வார கோரிக்கை 
இந்த குளத்தில் தேங்கி உள்ள நீர் எந்த வித பயன்பாடும் இல்லாத நிலையில் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள முட்புதர்கள் விஷபூச்சிகளின் வசிப்பிடமாக உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது.  எனவே இக்குளத்தை விரைவில் தூர்வாரி நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைத்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்