வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கூடலூர் அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-13 17:01 GMT
கூடலூர்: 

கூடலூர் அருகே லோயர்கேம்ப் -குமுளி மலைப்பாதை வனப்பகுதியில் ஆண் ஒருவர் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர், கேரள மாநிலம் மலையபுரம் இடுக்கி காலனி பகுதியை சேர்ந்த ஜெய்சன் மேத்யூ (வயது 29) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்