லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரத்தை அடுத்துள்ள பாப்பம்பாடியைச் சேர்ந்தவர் ராசு(வயது 40). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக கடன் பிரச்சனையில் சிக்கித்தவித்த ராசு, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.