சாராயம் விற்ற பெண் கைது

சாராயம் விற்ற பெண் கைது

Update: 2022-02-13 16:50 GMT
நன்னிலம்:-

நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் நன்னிலம், பூந்தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பூந்தோட்டம் அருகே மாரியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்பது தெரியவந்தது. இதனையடுத்து சாராய விற்பனையில் ஈடுபட்ட மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த கஸ்தூரி (வயது52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்