வேடசந்தூர், தாடிக்கொம்புவில் போலீசார் கொடி அணிவகுப்பு
வேடசந்தூர், தாடிக்கொம்புவில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.;
வேடசந்தூர்:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில், போலீசார் வேடசந்தூரில் நேற்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
இந்த அணிவகுப்பை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வேடசந்தூர் பி.வி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளியில் இருந்து தொடங்கி வைத்தார். அணிவகுப்பு வடமதுரை சாலை, பஸ் நிலையம், குடகனாறு பாலம் வழியாக ஆத்துமேடு வந்தடைந்தது.
இதில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேடசந்தூர் பாலமுருகன், எரியோடு சத்தியபிரபா, வடமதுரை தெய்வம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக பி.வி.எம். மெட்ரிக்குலேசன் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தை போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுபோல தாடிக்கொம்புவில் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதற்கு திண்டுக்கல் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் தாலுகா போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் சேதுபாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜலால் முகமது, பெருமாள், வெள்ளைத்துரை, திலிப் குமார், அழகர்சாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் அகரம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று அகரம் ரோடு, சந்தைப்பேட்டை, வடக்குத்தெரு, அண்ணாநகர் வழியாக தாடிக்கொம்பு பஸ்நிலையத்தை அடைந்தனர்.