தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்குப்பதிவுக்கு தேவையான 80பொருட்கள் தயார்

தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன;

Update: 2022-02-13 15:12 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் 319 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களும் வாங்கப்பட்டு உள்ளன. அதன்படி மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட படிவங்கள், அரக்கு, அழியாத மை, பென்சில், பேனா, கவர்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன. இந்த பொருட்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பும் வகையில் தனித்தனியாக பிரித்து பைகளில் போடும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பொருட்கள் அனைத்தும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குப்பதிவு எந்திரத்துடன் மண்டல அலுவலர்கள் கொண்டு செல்ல உள்ளனர்.

மேலும் செய்திகள்