நீர்ப்பறவைகளை கணக்கெடுக்கும் பணி

வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதிகளில் நீர்ப்பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடந்்தது.;

Update: 2022-02-13 14:49 GMT
வால்பாறை

வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக பகுதிகளில் நீர்ப்பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

நீர்ப்பறவைகள்

கோவை வனப்பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் உத்தரவின் படியும், துணை கள இயக்குனர் கணேசன் அறிவுரையின் படியும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மொத்தம் 11 நீர் நிலை பகுதிகள் கண்டறியப்பட்டு நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வால்பாறை வனச்சரக பகுதியில் அப்பர்ஆழியார், காடம்பாறை ஆகிய இரண்டு அணைக்கட்டு நீர் பிடிப்பு பகுதியிலும், மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் சோலையாறு அணை, நீரார் அணை ஆகிய இடங்களிலும் காலை 6.00 மணி முதல் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

முதன்முறையாக கணக்கெடுப்பு பணி

வால்பாறை வட்டார பகுதி நீர் நிலைகளில் முதன்முறையாக நடைபெற்ற இந்த நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணியில் புள்ளி மூக்கு வாத்து, தட்டைவாயன், நாமக்கோழி, வெண்புருவ வாத்து, தாழைக் கோழி, சின்னநீர்க்காகம், பெரிய நீர்க்காகம், பாம்புத்தாரா, இந்திய நீர்க்காகம், முக்குளிப்பான், சாம்பல் கூழைக்கடா, சிறிய நீலமீன்கொத்தி, வென்மார்பு மீன் கொத்தி, செம்மூக்கு ஆள்காட்டி, வென்மார்பு கானாங்கோழி, சின்னபட்டாணி உப்பு கொத்தி, நெடலைகொக்கு, உண்ணிகொக்கு, பெரிய பூநாரை உள்ளிட்ட பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. 
மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்குட்பட்ட நீரார் அணை பகுதியில் வனவர் திருநாவுக்கரசு முன்னிலையில் வனக்காப்பாளர்கள் சங்கர், சின்னராமர், வனக்காவலர் நாகராஜமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் அரவிந்த், நவீன்குமார் இவர்களுடன் 2 தன்னார்வலர்கள் இணைந்து நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்