பொதுஇடங்களில் முககவசம் அணியாத 128 பேருக்கு அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முககவசம் அணியாத 128 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-02-13 14:05 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு விதித்து உள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே போன்ற முக கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடிய 128 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 600 போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்