கண்மாய்க்குள் கிடந்த மர்ம மூடை
கண்மாய்க்குள் கிடந்த மர்ம மூடையால் பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, தொண்டி அருகேயுள்ள தேளூர் கிராமத்தில் கண்மாய்க்குள் சாக்கு மூடை ஒன்று கிடந் ்துள்ளது. மேலும் அந்த மூடையில் ஈக்கள் மொய்ப்பதை சிலர் பார்த்துள்ளனர். பிணமாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த நிலையில் இதனை ஊருக்குள் வந்து கூறியுள்ளனர். இந்த செய்தி சிறிது நேரத்தில் பரவியதை தொடர்ந்து கண் மாய் பகுதியில் பொதுமக்கள் அதிகஅளவில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம மூடையை பிரித்து பார்த்த போது இறந்து போன செம்மறி ஆடு இருந்தது தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் முன்னிலையில் கிராமத்தினர் இறந்த செம்மறி ஆட்டை அந்த பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில் அந்த பகுதியில் செம்மறி ஆடுகள் மேய்த்தவர்கள் ஆடு இறந்து விட்ட நிலையில் சாக்கு மூடையில் கட்டி கண்மாய்க்குள் வீசி சென்றது தெரிய வந்தது.