காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் தெப்பத்திருவிழா
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் ஆண்டு தோறும் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமத்திலுள்ள ஏரியில் தெப்பத்திருவிழா கண்டருளுவார். அதன்படி நடைபெற்ற தெப்பத்திருவிழாவையொட்டி காஞ்சீபுரத்தில் இருந்து வரதராஜபெருமாள் தேவியருடன் புறப்பட்டு முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்குப்பேட்டை, கீழ்ஒட்டிவாக்கம், வாலாஜாபாத், கட்டவாக்கம், குண்ணவாக்கம் வழியாக தென்னேரி கிராமத்தில் எழுந்தருளினார். அங்கு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று தென்னேரி ஏரியில் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தெப்பத்திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.