தேர்தல் பிரசாரத்தில் யாரையும் தாக்கி பேசக்கூடாது
தொண்டி பேரூராட்சியில் தேர்தல் பிரசாரத்தில் யாரையும் தாக்கி பேசக்கூடாது என்று வேட்பாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தொண்டி,
தொண்டி பேரூராட்சியில் தேர்தல் பிரசாரத்தில் யாரையும் தாக்கி பேசக்கூடாது என்று வேட்பாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
வேட்பாளர்கள் கூட்டம்
தொண்டி பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி வார்டு 4 மற்றும 12-வது வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலை மையில் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் இந்த 2 வார்டு களிலும் ஏற்கனவே உள்ள வழக்கு விவரங்கள் எடுத்துக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதங்களில் நேரடியாக ஈடுபடக் கூடாது. பிரசாரத்தின்போது யாரையும் தாக்கி பேசுவது மற்றும் மதங்களின் அடிப்படையில் வாக்குவாதம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
அறிவுரை
சட்டம-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலை உருவாக்க கூடாது என்றும் முரண்பாடான செயல்கள் இருந்தால் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் தான் தெரிவிக்க வேண்டும். நேரடியாக யாரும் வீண் வாதங்களில் ஈடுபடக்கூடாது.
போலீஸ் நிலையத்திற்கு அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்போன் எண்ணிற்கு தெரிய படுத்த வேண்டும்என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் வேட் பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.