சிந்தாதிரிபேட்டை கூவம் ஆற்றில் குதித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி

சிந்தாதிரிபேட்டை கூவம் ஆற்றில் குதித்து மாற்றுத்திறனாளி தற்கொலை தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.;

Update: 2022-02-13 12:30 GMT
சென்னை சிந்தாதிரிபேட்டை, படவட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் சரவணன் நேற்று காலை சிந்தாதிரிபேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சிந்தாதிரிபேட்டை போலீசார் மற்றும் திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சரவணனை கூவம் ஆற்றில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலை செய்ய முயன்ற காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்