கட்டிட தொழிலாளி தற்கொலை முயற்சி

குடும்பத்தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றபோது போலீசார் கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-13 11:59 GMT
ராமநாதபுரம், 
குடும்பத்தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றபோது போலீசார் கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகராறு
ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் காலனியை சேர்ந் தவர் போத்துராஜ் மகன் இலங்கேஸ் (வயது29). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி ஜெயசுதா. ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். 
இலங்கேஸ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததுடன் மனைவி குழந்தைகளை அடித்து கொடுமைப படுத்தி வந்தாராம். இவ்வாறு குடித்துவிட்டு வந்து கொடுமைப் படுத்தியதால் ஹலோ போலீசுக்கு தகவல் தெரிவித்தார்களாம். போலீசார் வந்து விசாரித்தபோது இலங்கேஸ் குடித்திருந்ததால் மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி எச்சரித்து சென்றுள்ளனர். 
தற்கொலை முயற்சி
நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு போலீசார் எச்சரித்து எழுதி வாங்கி விட்டு அனுப்பி உள்ளனர். காவல்நிலையத்தில் இருந்து சென்ற இலங்கேஸ் புத்தேந்தல் பஸ்நிறுத்தம் அருகில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். இதுகுறித்து ஜெயசுதா அளித்த புகாரின் அடிப் படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்