வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகளை திருடியதாக 3 பேரிடம் போலீசார் விசாரணை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அணில் குரங்குகளை திருடியதாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-02-13 08:49 GMT
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக இரும்பு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அரிய வகை 2 ஆண் அணில் குரங்குகளை கடந்த 8-ந்தேதி மர்ம நபர்கள் பூங்காவுக்குள் நுழைந்து இரும்பு கூண்டின் கம்பிகளை வெட்டி அகற்றிவிட்டு திருடி சென்றனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா வனசரகர் வாசு ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைந்து 2 அணில் குரங்குகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்