மோட்டார்சைக்கிள் வந்த 2 வாலிபர்கள் பலி

அவினாசி அருகே சாலையின் மைய தடுப்பில் புதிய மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-02-13 08:42 GMT
அனுப்பர்பாளையம்
அவினாசி அருகே சாலையின் மைய தடுப்பில் புதிய மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலைமைய தடுப்பில் மோதியது
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓட்டல் அருகே பதிவு எண் பெறப்படாத ஒரு புதிய மோட்டார்சைக்கிளில் 20  வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் மையத்தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
2 பேர் பரிதாப சாவு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது 2 வாலிபர்களும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தனர். அவர்களது உடல் பிரேதபரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் பதிவு எண் கூட இல்லாதபுதிய மோட்டார்சைக்கிள் என்பதால் விபத்தில் இறந்த வாலிபர்கள் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்