கோயம்பேட்டில் பரிதாபம்: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோயம்பேட்டில் செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-13 01:26 GMT
பூந்தமல்லி,

கோயம்பேடு நியூ காலனியில் உள்ள 10-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 46). இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் குணவதி (18). இவர் அண்ணா நகரில் உள்ள கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த குணவதி செல்போனில் நீண்ட நேரமாக பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை கண்ட அவரது தாய் கண்டித்ததால் கோபித்து கொண்டு அறைக்குள் சென்ற குணவதி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டியும் திறக்காததால், உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது குணவதி தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட குணவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்