சூளை அடுக்குமாடி குடியிருப்பில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி - இளம்பெண் உயிரிழப்பு

சூளை அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்த காதல் ஜோடி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர்.;

Update: 2022-02-13 01:23 GMT
சென்னை,

சென்னை சூளை நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தீப் ஜெயின் (வயது 40). இவர் இளைச்சி (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 2 பேரும் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டனர். இதில் வலியால் துடித்த இருவரும் அலறி அங்கும் இங்குமாக ஓடியுள்ளனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றதோடு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பெரியமேடு போலீசார் தீயை அனைத்து சந்தீப் மற்றும் இளைச்சியை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் இளைச்சி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு 60 சதவீதம் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சந்தீப் ஜெயினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்