மேச்சேரி அருகே நீர்த்தேக்கத்தில் மூழ்கி தொழிலாளி பலி

மேச்சேரி அருகே நீர்த்தேக்கத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.;

Update: 2022-02-12 22:13 GMT
மேச்சேரி:
மேச்சேரி அருகே பானாபுரம் பருத்திக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 33). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கூனாண்டியூர் பகுதியில் உள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச்சென்றார். அப்போது குளித்தபோது அழகேசன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். இது குறித்த தகவல் அறிந்து வந்த மேச்சேரி போலீசார், அழகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்