தஞ்சை மாநகராட்சி தி.மு.க. பெண் வேட்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி தி.மு.க. பெண் வேட்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது.;
தஞ்சாவூர்;
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி தி.மு.க. பெண் வேட்பாளருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நிறைமாத கர்ப்பிணி
தஞ்சை மாநகராட்சி 51-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் டாக்டர் அஞ்சுகம் பூபதி. இவர், தி.மு.க.வில் தஞ்சை மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக உள்ளார். இவருடைய கணவர் வெற்றிக்குமார், திராவிடர் கழகத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ளார்.
வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும், சுறு சுறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஏற்கெனவே 3½ வயதில் கயல் என்ற பெண் குழந்தை உள்ளது.
ஆண் குழந்தை பிறந்தது
வருகிற 25-ந் தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் என கூறப்பட்ட நிலையிலும், தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த அஞ்சுகம் பூபதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று மாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
வாழ்த்து
வேட்பாளருக்கு குழந்தை பிறந்ததை அறிந்த தி.மு.க.வினர் உள்ளிட்ட பலரும் டாக்டர் அஞ்சும் பூபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
குழந்த பிறந்ததை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் மீண்டும் அஞ்சுகம் பூபதி பிரசார களத்துக்கு செல்வார் என்று அவரது கணவர் தெரிவித்தார்.