கும்பகோணத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
கும்பகோணம்;
ஹிஜாப் அணிந்துவர அனுமதி வழங்கக்கோரி கும்பகோணத்தில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி தஞ்சை வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கும்பகோணத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜாபர்அலி தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி பேசினார்.
2 ஆயிரதுக்கும் மேற்பட்டோர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமது பாருக், பொருளாளர் மன்சூர் அலி, துணைத் தலைவர் சிக்கந்தர் அலி துணை செயலாளர்கள் ஷாகுல், மஹாதீர் முகமது, அபி முகமது, அப்துல்ரஹ்மான் மற்றும் அணி செயலாளர்கள் நசுருதீன், சிக்கந்தர் பாட்சா உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கும்பகோணம் மாநகர தலைவர் இஸ்மத்பாட்சா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து கொண்டு கல்லூரிக்கு வரக்கூடாது என்ற காரணத்தை கூறி இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிப்பதை கண்டித்தும், ஹிஜாப் அணிந்து வர அனுமதி வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.