ருக்மணி சமஸ்தானம் கோவில் குடமுழுக்கு
ருக்மணி சமஸ்தானம் கோவில் குடமுழுக்கு
திருவிடைமருதூர்,
கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 6-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 11-ம் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து காலை 8 மணி அளவில் கடம் புறப்பாடு நடந்தது.
பரனூர் மகாத்மா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், துக்காராம் மகராஜ், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதர், கோவில் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் ஆகியோர் முன்னிலையில் கோவில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, புஷ்பார்ச்சனை செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. அப்போது கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் குைட பிடித்தவாறு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஆடுதுறை ஏ.வி.கே. அசோக்குமார், திருமங்கலக்குடி எல். தயாளன், மருத்துவக்குடி ம.க. ஸ்டாலின், கோவிந்தபுரம் டி.குமார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மூலவர் பாண்டுரங்க சாமிகள் மற்றும் ருக்மணி தாயார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.