நெல்லை:
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று அதிகாலையில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழையான காலை 8 மணி அளவில் பரவலாக பெய்தது. 9.30 மணிவரை பெய்த இந்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் நனைந்தபடி சென்றனர்.
நெல்லை மாநகரில் மதியம் 2 மணி அளவில் மீண்டும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. பொதுமக்கள் பலர் குடைபிடித்தபடி சாலையில் நடந்து சென்றனர். மழையால் நெல்லையில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.