சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-12 20:22 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் அருண்குமார்(வயது 21). இவர் பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது, இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அருண்குமார் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்