குடிசை தீப்பற்றி எரிந்தது

குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

Update: 2022-02-12 20:21 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது மனைவிகளான பசுபதி மற்றும் பொன்னம்மாள் ஆகியோருடன் அதே ஊரில் உள்ள அவரது மகன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தங்கியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஆறுமுகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி எரியத் தொடங்கியது. அக்கம், பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர். தீப்பற்றி எரிந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து போனதாக கூறப்படுகிறது. ேமலும் மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்