அரிசி ஆலையில் திருடியவர் கைது
நெல்லை அருகே அரிசி ஆலையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பெருமாள் கோவில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பேராச்சி (வயது 73). இவர் அரிசி ஆலை (ரைஸ்மில்) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் ஆலைக்கு சென்று பார்த்தபோது, மிஷினில் இருந்த இரும்பு பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பேராச்சி கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் கங்கைகொண்டான் அம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த வடிவேல் அய்யா என்ற வடிவேல் (21) அரிசி ஆலையில் இருந்து இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டது.