ஸ்கூட்டர் மீது மினி லாரி மோதல் வாலிபர் பலி

கொள்ளிடம் அருகே ஸ்கூட்டர் மீது மினி லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.;

Update: 2022-02-12 19:42 GMT
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் செல்வமணி (வயது 34). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான ஸ்கூட்டரில் புதுப்பட்டினத்தில் இருந்து பழையாறு சுனாமி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். தற்காஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வமணி தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து செல்வமணி சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். .இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்