கொடைக்கானல் அருகே மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

கொடைக்கானல் அருகே மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-12 19:41 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பூம்பாறை கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 33). இவரது மனைவி ராணி. இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ராணியின் தாய் பூபதி (45) தகராறை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பாண்டி மறைத்து வைத்திருந்த கத்தியால் பூபதியை குத்தினார்.
இதையடுத்து படுகாயமடைந்த பூபதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்