போலீசார் கொடி அணி வகுப்பு
வைத்தீஸ்வரன்கோவிலில் போலீசார் கொடி அணி வகுப்பு நடந்தது.
சீர்காழி:
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றியும், பாதுகாப்பாகவும் வாக்களிக்கும் வகையில், போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இந்த அணிவகுப்பை சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தொடங்கி வைத்தார். ஊர்வலமானது மயிலாடுதுறை சாலை, மேல வீதி, தெற்கு வீதி, கீழ வீதி வழியாக பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், வைத்தீஸ்வரன் கோவில் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து போலீசாரின் அணிவகுப்பு புறப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகள் வழியாக மணல்மேடு போலீஸ் நிலையத்தை அடைந்தனர்.