மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
திமிரி, கலவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
ஆற்காடு
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. திமிரி பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியை தேர்தல் பொதுப் பார்வையாளர் எஸ்.வளர்மதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பாஸ்கர பாண்டியன், நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மரியம் ரெஜினா, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏழுமலை, வட்டாரப் பொதுப் பார்வையாளர் மணிமேகலை உள்பட பலர் உடனிருந்தனர்.
இதேபோல் கலவை பேருராட்சியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை பொது பார்ைவயாளர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.