லட்சுமி நரசிம்மர் கோவிலில் தெப்போற்சவம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தெப்போற்சவம் நடைபெற்றது.;

Update: 2022-02-12 18:26 GMT
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 3 நாள் தெப்போற்சவம் ேநற்று கோலாகலமாக தொடங்கியது. 

அதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு உற்சவர்களான பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

மாலை பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் மரக் கேடயத்தில் எழுந்தருளி ஊர் கோவிலில் இருந்து மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக புறப்பட்டு தக்கான்‌குளம் என்ற பிரம்ம தீர்த்தக்குளத்துக்கு வந்தார்.

பிரம்ம தீர்த்தக்குளத்தில் மின்விளக்குகளால், பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

குளத்தின் கரைகளில் அமர்ந்திருந்த திரளான பக்தர்கள் ஓம் நமோ நாராயணா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாண வேடிக்கைகள் நடந்தது.

விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 5 சுற்றுகளும், 3-வது நாளான நாளை (திங்கட்கிழமை) இரவு 7 சுற்றுகளும் உற்சவர்கள் ெதப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்