குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பிணமாக மீட்பு

சீ்ர்காழி அருகே குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-02-12 18:24 GMT
திருவெண்காடு:
சீர்காழி அருகே பாகசாலை போலீஸ் சரகம் தொக்கலாகுடி கிராமத்தை சேர்ந்த தங்கராசு மனைவி அஞ்சம்மாள் (வயது 74). இவர் அதே ஊரில் உள்ள புதுகுளத்தில் தவறி விழுந்து மூழ்கி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சீர்காழி தாசில்தார் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய மூதாட்டியை படகு மூலம் தேடினர். இதையடுத்து மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அஞ்சம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்