வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து நகை, பணம் கொள்ளை

வாணியம்பாடியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து நகை, பணத்தை மா்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2022-02-12 18:12 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டையை அடுத்த கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 50). 

இவர் தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை தின்பண்டங்கள் தயாரிக்கும் கூடமாக பயன்படுத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து, அங்கிருந்த பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.65 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் சிக்கந்தர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்