வாலிபரை தாக்கி பணம்- செல்போன் பறிப்பு; 4 பேர் கைது

கழுகுமலையில் வாலிபரை தாக்கி பணம், செல்போனை பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-12 17:24 GMT
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கொக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த அருணகிரி பாண்டியன் மகன் அருண்பிரசாத் (வயது 24). இவர் நேற்று முன்தினம் கழுகுமலை அம்பேத்கர் நகர் சுடுகாட்டு பகுதி அருகே கஞ்சா வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 4 பேர் சேர்ந்து அருண் பிரசாத்தை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்துக் கொண்டு ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்பேத்கர்நகரை சேர்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (வயது 22), கருப்பசாமி மகன் அரவிந்தசாமி (19), அண்ணாதுரை மகன் மாரியப்பன் (19) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்