தண்ணீர் தொட்டியில் குதித்து சிறுமி தற்கொலை
ஓசூரில் தண்ணீர் தொட்டியில் குதித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர், பிப்:
ஓசூர் பேகேப்பள்ளி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் நித்யராணி (வயது 16). இவர் வீட்டில் வேலைகளை செய்யாமல் இருந்ததால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யராணி, பாகூர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.