பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை
சிங்கம்புணரி அருகே பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலத்தில் அமைந்துள்ள கிராமத்து கோவிலான கூந்தலுடைய அய்யனார் கோவிலில் அமைந்துள்ள அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தை மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. கூந்தலுடைய அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பத்ரகாளி அம்மன் சிவப்பு பட்டு உடுத்தி எலுமிச்சை மாலை சூட்டப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவிலில் அன்ன தானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி குலாலர் வம்சாவழியினர், பூஜகர்கள் மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.