மணல் கடத்தல்; 3 பேர் கைது

நெல்லை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-12 17:09 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ஆரைக்குளம், காட்டாற்று ஓடை பகுதியில் முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் (வயது 36), கருங்குளம் சப்பாணி (32), கீழமுன்னீர்பள்ளம் ரத்தினக்குமார் (23) ஆகிய 3 பேரும் சட்டவிரோதமாக மணலை 11 சாக்குகளில் எடுத்துக்கொண்டு லோடு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 மூட்டை மணல், ஒரு லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்