17¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 17¾ லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 17 ¾ லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்
தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் முகாமை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
மாவட்டம் முழுவதும் 700 இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில் 17, 824 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இது வரை மொத்தம் 17 லட்சத்து 74 ஆயிரத்து 901 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10 லட்சத்து 25 ஆயிரத்து 441 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
இதில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட 51 ஆயிரத்து 60 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி 5 ஆயிரத்து 553 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
2-வது தவணை
கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாது காப்பு பெற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழுமை யாக தங்களது முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக்கொள்வது அவசியம். எனவே அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.