த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
இளையான்குடியில் த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இளையான்குடி,
இளையான்குடியில் த.மு.மு.க.வினர் வாள்மேல் நடந்த அம்மன்கோவில் திடலில் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.மு.மு.க. மாநில செய லாளர் சிவகாசி முஸ்தபா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப் பாட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட ஆண், பெண் த.மு.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இளையான்குடி நகர் பொறுப்பாளர் ஜலாலுதீன் நன்றி கூறினார்.