கோவிலில் திருடிய 2 பேர் கைது

ஆனைமலை அருகே கோவிலில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-12 16:11 GMT
ஆனைமலை

ஆழியாறு அருகே அங்களகுறிச்சியில் அய்யப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, அங்குள்ள பூஜை பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். 

இதில் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த டேவிட் குமார் (வயது 27), பிரபு (30) என்பதும், அய்யப்பசாமி கோவிலில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்்கள் திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்