மூதாட்டி கொலையில் கணவருக்கு உடந்தையாக இருந்த வாலிபர் கைது

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலையில் கணவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-12 15:47 GMT
ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலையில் கணவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
 ஆர்.எஸ்.மங்கலம்  அருகே செட்டிய மடையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்தியாகு என்ற சந்திரசேகர் மனைவி ஞானசவுந்தரி (வயது80). கடந்த 5-ந்தேதி இரவு சந்தியாகு மனைவி ஞானசவுந்தரியிடம் செலவுக்கு பணம் கேட்ட தாகவும் அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தியாகு அரிவாளை எடுத்து ஞானசவுந்தரி தலையின் பின்புறம் தாக்கியுள்ளார்.
இதனால் ஞானசவுந்தரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இவர் செய்த தவறு வெளியில் தெரியாத வகையில் தடயங்களை அழித்து விட்டு கடைத்தெருவுக்கு செல்வது போல் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர் மர்ம நபர் யாரோ அடித்துக் கொன்றுவிட்டதாக நாடகமாடி உள்ளார். 
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து சந்தியாகுவிடம்் விசாரணை செய்த போது செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து அருவாளை எடுத்து தலையில் பின்புறம் அடித்தேன். இதனால் சம்பவ இடத் திலேயே உயிரிழந்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் சந்தியாகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணை
ஞானசவுந்தரி கொலை தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை செய்தபோது ஞானசவுந்தரி வீடு அருகே செட்டியமடையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டம் ஆனந்தூர் அருகே உள்ள அளவிடங்கான் கிராமத்தை சேர்ந்த பிரதீப் (24) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது அவர், சந்தியாகு, ஞானசவுந்தரி 2 பேரும் வீட்டு வேலை செய்ய அழைப்பார்கள். கொலை நடந்த அன்று சந்தியாகு ஞான சவுந்தரியை கொலை செய்து தடயங்களை அழித்துக் கொண்டிருக்கும் போது நான் வீட்டுக்குள் சென்று விட்டேன்.
கைது
அப்போது சந்தியாகு ரூ.3 லட்சம் தருவதாகவும் கொலை செய்ததாக ஒப்புக்கொள் என கூறி வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். பயந்துபோன நான் வீட்டில் பின்புற கதவை திறந்துகொண்டு வெளியே வந்து விட்டேன். போலீசார் என்னை வீட்டுக்கு தேடி வந்ததை என் வீட்டார் தகவல் தெரிவித்ததால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டேன் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்