மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

Update: 2022-02-12 15:37 GMT
மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆனைமடுவு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் துரை(வயது 40). விவசாயியான இவர் நேற்று முன்தினம் சங்கராபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆனைமடுவு நோக்கி சென்று கொண்டிருந்தார். பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள வளைவில் வந்த போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்